மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
:
kannan2-bildet

சிவசித்தன் (நா.கண்ணன்)

ஓம் தமிழ் “omtamil.info” வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அன்பான மக்களே உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்!

தமிழாம் நம் தாய்மொழி அதுவே நம் இறை மொழி என்று இருக்க நம் தாயையும் இறையையும் மறந்து வாழும் வாழ்க்கைக்கு இன்று பலரும் பழக்கப்பட்டுவிட்டார்கள். இதையே நாகரிகம் என்றும் கருதுகிறார்கள்.

மேற்கத்திய மோகத்தில் வாழும் நம் மனிதகுலம், தமிழை “கற்பதினால் ஆய பயனென் சொல்”
என்று புதுக் குறள் வடிக்கின்றது.

மக்களே! நம் தமிழ்த் தாயை அணைத்துக் காப்பதற்கு பல காரணங்கள் இருந்த போதும் என்னால் ஒரு காரணத்தையேனும் அவளை மறப்பதற்காக கூறமுடியவில்லை.

தமிழ் முதலில் ஒரு அடையாளச்சின்னமாக விளங்குகின்றது.

மற்றும் தமிழ் பேசும் மக்களுடன் கருத்துக்களையும் , தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு தொடர்பு ஊடகமாக விளங்குகின்றது.

இவ் உலகில் பல மொழிகள் உள்ளன இம் மொழிகள் எல்லாம், நான் அறிந்தவரை, ஒரு சொல்லை உருவாக்கம் செய்யும் பொழுதினிலே ஒரு ஓசை, அவ் ஓசைக்கு ஒரு பொருள் என்றே ஆக்கம் பெற்றன. இதையும் தாண்டி நம் தமிழ்மொழியானவள், பொருள்காவியாகவும் விளங்குகின்றாள் என்றால் மிகையாகாது. உதாரணமாக கடவுள் என்ற சொல்லை எடுப்போமேயானால், கடவுளை உணர்வதற்கு நாம் கடந்து செல்ல வேண்டிய இலக்கு நம் உள்ளே இருப்பதால், நாம் நம் கவனத்தை உள் நோக்கி செலுத்தவேண்டும் என்ற நோக்கில் கட+ உள் என்ற பொருளை தன்னில் அடக்கி “கடவுள்” ஆனது.

நம் தமிழ்த் தாயானவள் அன்று நம் ஆதிகுரு முக்கண்ணன் முதல் இன்று வரை தன் வாழ்கை வரலாற்றில் அன்பிலும் ,அறத்திலும், அறிவிலும் , ஞானத்திலும் , வீரத்திலும் , ஒழுக்கத்திலும் சிறந்தவர்களைத் தாலாட்டி உள்ளாள் . அத்தகைய மொழியானவள் ஒரு வாழ்க்கை அறிவியல் சுரங்கம் ஆக விளங்குவது ஆச்சரியப்படும் விடயம் ஒன்றும் இல்லையே!

அத்துடன் உடல் மற்றும் உளவியல் மருந்தாகவும் விளங்குகின்றது. “ஓதாமல் ஒருநாளும் இருத்தல் வேண்டாம்” என்ற ஒளவையின் கூற்றை அறிந்து இருப்பீர்கள். நம் தமிழ் எழுத்துக்களைத் தான் ஒரு நாள் ஏனும் ஓதாமல் இருக்க வேண்டாம் என்று ஒளவைப்பிராட்டி கூறுகின்றார். இவ்வெழுத்துக்களை முறையான உச்சாடனம் தினம்தோறும் செய்யும் போது கிடைக்கும் பலன்கள் சொல்லில் அடங்கா!

இவை அனைத்துக்கும் மேலாக வாழ்வியலின் தன்மையையும், அதனை எவ்வாறு மனித நேயத்துடன் வாழ்வது என்பன பற்றிய விடயங்களையும் அற்புதமாக நம் பாரம்பரியம் என்கின்ற பெட்டிக்குள் தமிழ் என்கின்ற திறவுகோலால் நம் மூதாதையோர் பூட்டிவைத்துள்ளனர். இத்தகைய மொழியை காப்பது தமிழனுடைய தலையாய கடமை மட்டுமல்ல உலகவாழ் மக்கள் அனைவருடையதும் என்பது எனது தாழ்மையான கருத்து.

திருக்குறள்

பிரிவு: அறத்துப்பால்

அதிகாரம்: துறவு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

- திருவள்ளுவர்
விளக்கம்:
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.