தமிழ் எழுத்துக்கள்

1. உயிர் எழுத்துக்கள்:

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

என்ற பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துக்கள் ஆகும்.

2. மெய் எழுத்துக்கள்:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

என்ற பதினெட்டு எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துக்கள் ஆகும்.

3. உயிர்மெய் எழுத்துக்கள்:

தமிழில் உள்ள உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் இணைந்து உயிர்மெய் எழுத்துக்கள் ஆகின்றன. இதனை கீழே உள்ள வரைவட்டையில் காண்க:

உயிர் எழுத்துக்களின் வகைகள்:

  1. குறில்: உதாரணமாக அ, இ, உ, எ, ஒ
  2. நெடில்: உதாரணமாக  ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள

மெய் எழுத்துக்களின் வகைகள்:

1. வல்லினம்

உதாரணமாக: க், ச், ட், த், ப், ற்

என்ற எழுத்துக்களைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துக்களைச் சொல்லும் பொழுது வயிற்றுள் இருந்து வலிமையாக காற்று மேலே வரும். எனவே இவை வல்லின எழுத்துக்கள் ஆகும்.

2.  மெல்லினம்

உதாரணமாக: ங், ஞ், ண், ந், ம், ன்

என்ற எழுத்துக்களைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துக்களைச் சொல்ல மென்மையான முயற்சி போதும். எனவே இந்த மென்மையான எழுத்துக்கள் மெல்லின எழுத்துக்கள் எனப்படுகின்றன.

3. இடையினம்

உதாரணமாக: ய், ர், ல், வ், ழ், ள்

என்ற எழுத்துக்களைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துக்களைச் சொல்ல மென்மையும், வன்மையும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது. எனவே இவை இடையின எழுத்துக்கள் எனப்படுகின்றன. மெய் எழுத்துக்கள் உயிர்க்குறில் எழுத்துக்களைவிடக் குறைவான நேரத்தில் ஒலிக்கப்படுகின்றன. இவற்றின் (மெய் எழுத்து) ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை ஆகும்.