தமிழும் சைவமும்

எல்லாப்புகழும் இறைவனுக்கே, என்றும் துணை குரு நமக்கே என்று கூறி: 

          

ஓம் சிவ ஓம்

பக்தியால் பாடவந்தேன் ஈசனே என் ஆதியோகி

சித்தனாய் – உன் சித்தனாய்ப் பாடி நின்றேன்

என்னை நீ ஆழவேண்டும்.

       முக்கண்ணா, முதல்வா, என் சிவகாமிநேசனே – என்

  உள்ளகத்தில் ஆள வந்த  உன்னைப் – பற்றினேன்

பற்றினேன்  நின் பாதம் தன்னை

சிக்கனப்பற்றினேன் நின் பாதம் தன்னை……!

ஓம் சிவ ஓம்

 
வாழ்க தமிழ்-வாழ்க சிவம்-வாழ்க வையகம்

– ஆக்கம் சிவசித்தன் (நா.கண்ணன்)

 

 

ஓம் இராம ஜெயம்

அன்பே சிவன் என்பார், சிவனே அன்பென்பார்!

அன்பும் சிவனும் எங்கென்று  நானலய, கண்ட துயர் கொஞ்சமில்லை!

வானிருந்து தான் உத்தித்தான் வாயுமகன் -ஆஞ்யநேயன்!

தானே சிவன் என்றான்! அன்பின் மறு வடிவென்றான்!

சொல்லின்மைந்தன், அவன் பேச்சில் மயங்கி விட்டேன்!

காண்பது மாயை அல்ல, நியம் என்று காட்டி நின்றான்!

மூலமே அனைத்துமாம், அனைத்துமே அதில்  அடங்க!

முக்கண்ணன் திருக்கோலம்,  என் ஆஞ்யநேயன் ஆனதுவே!

என் மூச்சில் அவன் உறங்க, அவன் மூச்சில் நான் உறங்க!

நான் கண்ட  இன்பம், சுவாமி, சொல்லில் அடங்கவில்லை !

ஓம் இராம ஜெயம் 


வாழ்க தமிழ்-வாழ்க சிவம்-வாழ்க வையகம்

– ஆக்கம் சிவசித்தன் (நா.கண்ணன்)