Blog Archives

  • ஆய்த எழுத்து

    Posted on August 1, 2017 by annsys in Uncategorized.

    ‘ஃ’ இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

    Continue Reading...
    No Comments.
  • உயிர்மெய் எழுத்து

    Posted on August 1, 2017 by annsys in Uncategorized.

    ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

    Continue Reading...
    No Comments.
  • சார்பெழுத்துகள்

    Posted on August 1, 2017 by annsys in Uncategorized.

    உயிர்மெய் எழுத்து ஆய்த எழுத்து உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலுகரம் குற்றியலிகரம் ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன.

    Continue Reading...
    No Comments.
  • மெய்யெழுத்துக்கள்

    Posted on August 1, 2017 by annsys in Uncategorized.

    கீழ்க்கண்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆகும், உயிரும், உடலும் இணைந்து வாழ்வை உருவாக்குவது போல், எழுத்துக்களில் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்தையும் உருவாக்குகின்றன. க் ங் ச ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் – மெய்யெழுத்துக்கள் உயிர் மெய்யெழுத்துக்கள் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் சந்திக்குமிடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் […]

    Continue Reading...
    No Comments.
  • உயிரெழுத்துக்கள்

    Posted on August 1, 2017 by annsys in Uncategorized.

    ஒரு மொழிக்கு உயிராக அமையும் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனப்படுகிறது, ஆங்கிலத்தில் இதனை (VOWELS) என்று அழைக்கிறோம். அவற்றின் வரிசை கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அ-அகரம் ஆ-ஆகாரம் இ-இகரம் ஈ-ஈகாரம் உ-உகரம் ஊ-ஊகாரம் எ-எகரம் ஏ-ஏகாரம் ஐ-ஐகாரம் ஒ-ஒகரம் ஓ-ஓகாரம் ஒள-ஓலைகரம் ஃ-அஃகேனம்

    Continue Reading...
    No Comments.
  • எளிமையாகத் தமிழ் இலக்கணம்

    Posted on August 1, 2017 by annsys in Uncategorized.

    தமிழ் தமிழ் என்றும், தமிழே தலை சிறந்த மிகவும் மூத்த மொழி என்றும் நாம் அனைவரும் பல்வேறு நிலைகளில் சொல்லி வரும் போது, சில நேரங்களில் தமிழைப் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியாமல், திணறும் நிலை ஏற்படுகிறது, அந்நிலை மாற்றி, அடிப்படை தமிழ் இலக்கணம் நாம் அனைவரும் கற்றுணர்ந்த ஒரு ஆற்றலாக இருக்க வேண்டும். இந்த இழையில் தமிழை அடிப்படையில் இருந்து கற்போம், உங்கள் ஐயங்களை கேளுங்கள், நமக்குத் தெரிந்த அளவில் களைய முயல்வோம், இல்லையெனில் கற்க முயல்வோம்.

    Continue Reading...
    No Comments.
  • ஓம் தமிழ் “omtamil.info” வலைத்தளம்

    Posted on December 19, 2016 by annsys in Uncategorized.

    ஓம் தமிழ் “omtamil.info” வலைத்தளம்  உங்களை அன்புடன்  வரவேற்கின்றது. அன்பான மக்களே உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்! இத் தளம் உலகவாள் மக்களுக்காக நம் தமிழையும், தமிழ் சார்ந்த விடையங்களையும், தமிழரின் ஒப்பில்லா தொன்மையான அறிவியலையும், அவர்களின் வாழ்வியலையும், அன்று நம் முப்பாட்டன் சிவனார்  ஆதி குரு வழிகாட்டல் தொட்டு இன்று வரை எடுத்துரைக்கும் விதமாக அமைக்கப்படுகின்றது. மேற்காணும் முயற்சியில் சித்திபெற பெரும்மதிப்புக்குரிய உலகவாள் மக்கள் அனைவருடைய பங்களிப்பை வேண்டியும் நிற்கின்றது. மேலும், இத்தளத்துடன் இணைந்து செயல்பட […]

    Continue Reading...
    No Comments.