மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: இலக்கணஅணி
தன்மை அணி, உவமையணி, உருவக அணி, பின்வரு நிலையணி, வேற்றுப்பொருள் வைப்பணி, வேற்றுமையணி, பிறிது மொழிதலணி, தற்குறிப்பேற்ற அணி, சுவையணி
இம்மலை மேக மண்டலத்தை முட்டுகிறது' என்று மிகைப்டக் கூறாமல், உள்ளதை உள்ளவாறு கூறியதனால் இது தன்மை நவிற்சி அணி எனப்படும். இஃது இயல்பு நவிற்சி என்றும் கூறப்படும்.

உவமை, பொருள், பொதுத் தன்மை, உவம உருபு என்னும் நான்கும் அமையும்படி அல்லது மூன்று அமையும்படி, அல்லது உவமையும் பொருளும் அமையும்படி கூறுவது உவமை அணியாகும்.

முகமதி - இது `முகம் ஆகிய மதி' என விரியும். இவ்வாறு உவமேயம் முன்னும் உவமானம் பின்னும் வரும்படி அமைவது உருவக அணி எனப்படும்.

ஒரு செய்யுளில் முன்வந்த சொல்லும் பொருளும் தனித்தனியேனும் கூடியேனும் பல இடங்களில் பின்வருமாயின், அது பின்வரு நிலையணி எனப்படும்.