மொழித் தேர்வு செய்க:

இதிலிருந்து:
இதற்கு
: சுவையணி
வீரச்சுவை, அச்சுச் சுவை, இழிப்புச் சுவை, வியப்புச் சுவை, காமச் சுவை, அவலச் சுவை, உருத்திரச் சுவை, நகைச் சுவை
வீரம், அச்சம், இழிப்பு (இளிவரல்), வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை (இவை தண்டியலங்கார ஆசிரியர் தரும் பெயர்கள்) என்று சுவை எட்டு வகைப்படும். இவற்றைத் தொல்காப்பியர் முறையே பெருமிதம், அச்சம், இளிவரல், மருட்கை, உவகை, அழுகை, வெகுளி, நகை என்பர்.

இவற்றுள் ஒவ்வொன்றும் அமைந்து வரும் செய்யுள் சுவையணி அமைந்த செய்யுள் என்று சொல்லப்படும்.